• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமானம் மூலமான போக்குவரத்து தொடர்பான சட்டம்
- சருவதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் பயணிகள், பொதிகள் மற்றும் விமான சரக்குகள் கொண்டு செல்தலுக்கு உரியதான சட்டத்துக்குத் தேவையான ஒருமுகப்படுத்தல் மற்றும் முன் மதிப்பிடல் 'சருவதேச விமான போக்குவரத்துக்கான சில சட்டங்களை ஒன்றுபடுத்துவது தொடர்பான சமவாயத்தின்' நோக்கமாகும். 1998 ஆம் ஆண்டில் மொன்றியலில் செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த சமவாயத்திற்கு இலங்கை உறுப்பு நாடொன்றாகும்.

நாட்டினுள் இந்த சமவாயத்திற்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு இதற்கு முன்னர் அமைச்சரவைக்கு சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவுக்கு தொடர்புபடுத்தப்பட்டது. இதற்கமைவாக, இந்த உபகுழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசுகளையும் உள்ளடக்கி சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட 'விமானம் மூலமான போக்குவரத்து தொடர்பான சட்டமூலத்தை' அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.