• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒருகொடவத்த - அம்பதலே வீதி அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக குழாய்நீர் வலையமைப்பினை அபிவிருத்தி செய்தல்
- ஒருகொடவத்த - அம்பதலே வீதியினை விரிவுபடுத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகரத்திற்கு நீர் விநியோகிக்கும் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த பிரதான குழாய் முறைமையும் இந்த வீதியில் உள்ளமையினால் வீதி அபிவிருத்தி பணிகளுக்கு ஒருங்கிணைவாக நீர் குழாய் முறைமையை மீண்டும் பதிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, இந்த நீர் குழாய்களை பதிக்கும் கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நிதி வழங்கும் நோக்கில், ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளவாறு ஒஸ்ட்ரியாவின் Unicredit வங்கியுடனும் மக்கள் வங்கியுடனும் கடன் உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.