• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'எமது நலம் - நாட்டின் பலம்' தேசிய சுகாதார மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்
- தொற்றா நோய்களை தடுப்பதற்கு சமூக சுகாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை கிராமிய மட்டத்தில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் தொற்றா நோய்கள் காரணமாக இலங்கையில் மக்கள் அடைந்துள்ள ஆபத்தான நிலைமையிலிருந்து அவர்களை விடுவித்து, ஆரோக்கியம் மிக்கவர்களாகவும் பலம்மிக்க பொருளாதாரத்துடனான நாடொன்றினை நிருமாணிக்கும் நோக்கில் 'எமது நலம் - நாட்டின் பலம்' என்னும் பெயரில் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றினை நடைமுறைப் படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. சானாதிபதி செயலகத்தின் கீழ் தாபிக்கப்படும் விசேட செயற்பாட்டு அலகொன்றின் ஒருங்கிணைப்பின் கீழ் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுடனும் ஏனைய உரிய அமைச்சுக்களுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்திலிருந்து பொலன்நறுவை, களுத்துறை, மொனராகலை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இதனை முன்னோடிக் கருத்திட்டமொன்றாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.