• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தவறான மண்ணெண்ணெய் பாவனையைத் தடுத்தல்
- வீடுகளுக்கு வெளிச்சம் ஊட்டுதல் போன்ற தேவைகளுக்கு நாட்டின் குறைந்த வருமானம் பெறுபவர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதனால் மண்ணெண்ணெய் சார்பில் அரசாங்கம் பாரிய மானியமொன்றை வழங்குகின்றது. தற்போது கிராமிய பிரதேசங்களுக்கு பெரும்பாலும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமையினால் கிராமிய மக்களின் மண்ணெண்ணெய் பாவனையானது குறைவடைந்துள்ளது. எவ்வாறாயினம் கடந்த சில மாதங்களில் உள்நாட்டு மண்ணெ்ணணெய் பாவனை எதிர்பாராத விதத்தில் பாரிய அளவில் அதிகரித்துள்ளதோடு, அது மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் நிவாரண விலை காரணமாக சில தரப்பினர்களினால் தூரப் பயணங்களுக்கான வசு வண்டிகள் மற்றும் லொறிகள் என்பனவற்றிற்கு டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி ஓடக்கூடிய விதத்தில் அவற்றின் என்ஜின்களை மாற்றியமைத்தல் மற்றும் பெற்றோலில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் கலத்தல் என்பன நிகழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த கலப்பானது வாடகை பௌசர்கள் மூலம் உரிய முகவர் எரிபொருள் நிரப்பகங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லும் போது மேற்கொள்ளப்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு துரிதமாக நடவடிக்கைகளை எடுக்கும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சட்டவிரோதமாக எரிபொருள் கலப்பில் ஈடுபடும் அல்லது மண்ணெண்ணெய் சம்பந்தமான வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் எரிபொருள் நிரப்பக முகவர்களின் முகவர் உரிமையினை இல்லாதொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.