• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை இராணுவத்திற்குத் தேவையான கறுப்பு அடி உயர பாதணிகள் (Boot High Leg) 75,000 சோடிகள் கொள்வனவு செய்தல்
- இலங்கை இராணுவத்திற்குத் தேவையான கறுப்பு அடி உயர பாதணிகள் (Boot High Leg) 75,000 சோடிகள் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 232 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Irosha International (Pvt.,) Ltd நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.