• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் பக்கவாத பிரிவொன்றைத் தாபித்தல்
- முதியோர்களின் இயலாமைக்கு பக்கவாதம் பிரதான காரணமாகும். பக்கவாத நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை வசதிகளை விருத்தி செய்வதற்கு அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் பக்கவாத சிகிச்சைப் பிரிவொன்றைத் தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைப் பிரிவினை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 213.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Link Engineering (Pvt.,) Ltd நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.