• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200 ஆண்டுகள் பூர்த்தியை கொண்டாடும் முகமாக மொனராகலை மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இலங்கையை முழுமையாக கைப்பற்றியதன் பின்னர் ஏற்பட்ட விளைவுகளுக்கு எதிராக ஊவா - வெல்லஸ்ஸ மக்களினால் 1818 ஆம் ஆண்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, இது ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதலாவது சுதந்திர போராட்டாகும். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக ஆங்கிலயர்களினால் இந்தப் பிரதேசத்தில் குளங்கள், அணைக்கட்டுகள், தோட்டங்கள், காணிகள் மற்றும் வயற்காணிகள், ஆலயங்கள், வணக்கஸ்தலங்கள் போன்ற சொத்துக்களையும் மனித உயிர்களையும் கடுமையாக அழித்தனர். இது கடும் பொருளாதார சமூக பின்னடைவுக்கு காரணமாய் அமைந்தது.

இந்த அடக்குமுறைக்கு ஆளான பிரதேசங்கள் உள்ளடங்கலாக மொனராகலை மாவட்டம் தற்போதும் கூட குறைந்த அபிவிருத்தியினைக் காட்டும் மாவட்டமொன்றாகும். ஆதலால், 1818 விடுதலைப் ரோட்டம் நிகழ்ந்து 200 வருடங்கள் பூர்த்தியாகும் 2018 ஆம் ஆண்டில் அதனை கொண்டாடுவதற்கு ஒருங்கிணைவாக மொனராகலை மாவட்டத்திலுள்ள குளங்கள், அணைக்கட்டுக்களை புனரமைத்தல், வீதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், வணக்கஸ்தலங்களைப் புனரமைத்தல் கமத்தொழில் பண்ணைகள் மற்றும் கிராமிய கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தல் போன்றவற்றை குறியிலக்காகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. உரிய வரிசை அமைச்சுக்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி மேற்போந்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் அமைச்சரவையினால் மேலும் தீர்மானிக்கப்பட்டது.