• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலத்திரனியல் Phytosanitary சான்றிதழ் வழங்கும் முன்னோடிக் கருத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையினால் ஏற்றுமதி செய்யப்படும் தாவரம் மற்றும் தாவரம் சார்ந்த பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதற்குத் தேவையான சான்றிதழொன்றான Phytosanitary சான்றிதழ் இலங்கை கமத்தொழில் திணைக்களத்தின் தாவர தொற்றுத் தடைக்காப்பு பிரிவின் ஊடாக அச்சு வடிவத்தில் வழங்கப்படுகின்றது. பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் நாடுகளுக்கிடையில் ஆவணங்களை பறிமாறிக் கொள்ளும் வழிமுறை யொன்றாக இலத்திரனியல் Phytosanitary சான்றிதழ் வழங்கும் தேவை ஐக்கிய நாடுகளின் சருவதேச தாவர அபிவிருத்தி சமவாயத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலத்திரனியல் Phytosanitary சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டத்தை பரீட்சார்த்தமாக ஆசிய பசுபிக் வலயத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாவர மற்றும் தாவரம் சார்ந்த பொருட்களின் பறிமாற்றலின் போது வினைத்திறன் மற்றும் பாதுகாப்பு சருவதேச ரீதியில் வளர்ச்சியடைவதன் மூலம் இலங்கைக்கு புதிய சந்தை மற்றும் விற்பனை வாய்ப்புகள் உருவாகும். இந்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் சருவதேச தாவரப் பாதுகாப்பு சமவாயத்தின் வழிகாட்டலின் கீழ் அவுஸ்திரேலிய கமத்தொழில் மற்றும் நீர்வள திணைக்களம் அனுசரணை வழங்குகின்றது. இந்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இது சம்பந்தமாக இலங்கை கமத்தொழில் திணைக்களத்துக்கும் அவுஸ்திரேலியாவின் கமத்தொழில் மற்றும் நீர்வள திணைக்களத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுவதற்கும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.