• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்ட “Enterprise Sri Lanka” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகைக் கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- வருடாந்த தனியாள் வருமானத்தை 5,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்தல், ஒரு மில்லியன் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் ஏற்றுமதி பெறுமதியை இரட்டிப்பாக்குதல் ஐந்து சதவீதத்திற்கு கூடுதலான வருடாந்த பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சியினைப் பேணுதல் போன்ற அரசாங்கத்தின் நடுத்தவணைக்கால அபிவிருத்தி குறியிலக்குகளை 2020 ஆம் ஆண்டளவில் அடைவதற்காக “Enterprise Sri Lanka” நிகழ்ச்சித்திட்டமானது 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டது. இதன்கீழ் பொருளாதார அபிவிருத்தியின் முனைப்பான பங்காளர்களாக இனங்காணப்பட்டுள்ள இளைஞர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள், சுயதொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர்களை குறியிலக்காகக் கொண்டு 15 சலுகைக்கடன் திட்டங்கள் அடங்கலாக நிதி மற்றும் நிதிசாரா வசதிகள் வழங்கப்படவுள்ளது. இதன் சார்பில் 2018 ஆம் ஆண்டில் 20,230 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட 'பசுமைக்கடன்' (Green Loan) சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் பொலித்தீனுக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய பொதியிடல் பொருட்கள் உக்கக்கூடிய மூலப் பொருட்களில் இருந்து உற்பத்தி செய்வதற்கு உள்நாட்டு வர்த்தகர்களை ஊக்குவிப்பதற்கும் உல்லாச பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் சிறிய அளவிலான ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் 'Homestay' நிகழ்ச்சித்திட்டம் சார்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கும் நிதி வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த கடன் திட்டம் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.