• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஆராய்ச்சி ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- நாட்டில் 1985 ஆம் ஆண்டில் புற்றுநோயாளர்களின் விகிதாசாரமானது சனத்தொகையின் ஒரு இலட்சத்துக்கு 31.6 ஆகும் என்பதோடு, இது 2010 ஆம் ஆண்டளவில் சனத்தொகையின் ஒரு இலட்சத்துக்கு 82.1 ஆக அதிகரித்துள்ளது. புற்றுநோய் கட்டுப்பாடு சம்பந்தமாக செயலாற்றும் போது சகல வகையான புற்றுநோய்கள் சம்பந்தமாக சனத்தொகை அடிப்படையில் புற்றுநோய் ஆவணம் முறையாக பேணுவது மிக முக்கியமானதாகும். 1985 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தேசிய ரீதியிலான புற்றுநோய் ஆவணமொன்று பேணப்பட்டு வருகின்றதோடு, 2012 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் சனத்தொகை அடிப்படையிலான புற்றுநோய் ஆவணமொன்று பேணப்பட்டு வருகின்றது.

இலங்கையில் புற்றுநோய் ஆவணம் சனத்தொகை அடிப்படையில் மேலும் விருத்தி செய்ய முடியுமென புற்றுநோய்க்கான சருவதேச ஆராய்ச்சி நிறுவனத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொழினுட்ப ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் புற்றுநோய்க்கான சருவதேச ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.