• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை பிரதேசத்தில் கொன்சியூலர் அலுவலகமொன்றைத் தாபித்தல்
- வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் ஊடாக வழங்கப்படும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக அதன் கொழும்பு அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு 600 க்கும் மேற்பட்டோர் நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து வருகின்றனர். இந்த சேவைகளை பொது மக்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் பிரதேச கொன்சியூலர் அலுவலகங்களை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக வட மாகாண த்தில் வசிக்கும் பொது மக்களுக்கான பிரதேச கொன்சியூலர் அலுவலகமொன்று யாழ்ப்பாணம் பிரதேசத்தில் ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய பிரதேச கொன்சியூலர் அலுவலகமொன்று மாத்தறை பிரதேசத்திலும் திறப்பதற்கு தேவையான ஆரம்ப பணிகள் தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளது,

அநுராதபுரம், பொலன்நறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல், அம்பாறை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த சேவைகளை இலகுவாக வழங்கும் நோக்கில் பிரதேச கொன்சியூலர் அலுவலகமொன்றை பொலன்நறுவை பிரதேசத்தில் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பொலன்நறுவை தமன்கடுவ பிரதேச செயலகத்திற்கு அண்மையில் உள்ள கட்டிடமொன்றில் குறித்த இந்த பிரதேச கொன்சியூலர் அலுவலகமொன்றைத் தாபிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.