• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்மலானை விமானநிலையத்தை அபிவிருத்தி செய்யும் நீண்டகாலத் திட்டம்
- இலங்கையின் முதலாவது சர்வதேச விமான நிலையமான இரத்மலானை விமான நிலையமானது 1969 ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதான சர்வதேச விமான நிலையமாக இயங்கியது. பிரதான வர்த்தக நகரமான கொழும்புக்கு மிக அண்மையில் சகல பிரதான வீதிகளுக்கு புகுவழியுடன் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் மூலம் தற்போது நாளாந்தம் சுமார் 70 உள்நாட்டு விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பயிற்சி விமானங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக விமானங்கள் வழங்குதல், விசேட மற்றும் பிரமுகர் விமானப் பயணங்களை ஏற்பாடு செய்தல், தேசிய அனர்த்த நிலைமைகளின் போது மனிதநேய உதவிகளை வழங்குதல் போன்ற செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளும் அதேபோன்று இலங்கை விமானப் படையின் செயற்பாடுகளும் இந்த விமான நிலையத்தில் செயற்படுத் தப்படுகின்றன. இங்கு மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருகின்றதோடு, இதற்கு ஏற்றவாறும் கொழும்பு நகரத்தை கேந்திர மையமாக கொண்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்டும் இந்த விமான நிலையத்தின் ஆற்றல் விருத்திச் செய்யப்படவுள்ளது.

இதற்கமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை வசதிகளை வினைத்திறனுடன் வழங்கும் விமான நிலையமொன்றாக இரத்மாலான விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும் திறமுறை திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ள "Way to 2030" நீண்ட கால அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைபடுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.