• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹோமாகம, பிட்டிபன, மாஹேன்வத்தையிலுள்ள நெனோ தொழினுட்ப, விஞ்ஞான பூங்காவை விரிவுபடுத்துவதற்காக ஒப்பந்தகாரர் ஒருவரை தெரிவு செய்தல்
- ஹோமாகம, பிட்டிபன, மாஹேன்வத்தையிலுள்ள நெனோ தொழினுட்ப, விஞ்ஞான பூங்காவை கட்டம் 1 B யின் கீழ் விரிவுபடுத்தும் பணிக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 3,088 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Access Engineering PLC என்னும் நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.