• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக பாதையின் ஜா-எல இடைமாறலில் வாகனங்கள் உள்வரும் வௌியேறும் வீதிகளில் மேலதிக பாதை வரிசையொன்றை நிருமாணித்தல்
- கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக பாதையின் ஜா-எல இடைமாறலில் வாகனங்கள் உள்வரும் வௌியேறும் வீதிகள் இரண்டு (02) உள்ளன. ஆரம்பத்தில் இந்த சகல பாதை வரிசைகளிலும் நேரடியாக கட்டணம் (Manual Toll Collection - MTC) சேகரிக்கப்பட்டதோடு, மின்னணு கட்டண அறவீட்டு முறையானது (Electronic Toll Collection - ETC) அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பாதை வரிசையொன்று வீதம் இதற்காக ஒதுக்கப்பட்டது. அதிவேகப்பாதையை நாளாந்தம் பயன்படுத்து பவர்களில் பெரும்பாலானோர் இதுவரை மின்னணு கட்டண அறவீட்டு முறைக்கு ஈர்க்கப்படாமையினால் நேரடியாக கட்டணம் அறவிடும் பாதை வரிசையினூடாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

அதேபோன்று, ஜா-எல மற்றும் அதுசார்ந்த பிரதேசங்களில் துரிதமாக மக்கள் தொகை அதிகரித்துள்ளமையினால் ஜா-எல இடைமாறலை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. ஆதலால், வாகன நெரிசல் கூடிய நேரங்களில் இந்த இடைமாறலில் நேரடியாக கட்டணம் அறவிடும் பாதை வரிசையில் கடும் வாகன நெரிசல் காணக்கூடியதாகவுள்ளது.

இதற்கமைவாக, மின்னணு கட்டண அறவீட்டு முறையின் நீண்டகால நன்மைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இதற்காக ஒதுக்கப்பட்ட பாதை வரிசையை தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கும் மேற்குறிப்பிட்ட வாகன நெரிசலுக்கு மாற்று வழியாக நேரடியாக கட்டணம் அறவிடுவதற்காக ஒதுக்கப்பட்ட மேலதிக பாதை வரிசையொன்று வீதம் ஜா-எல இடைமாறலில் வாகனங்கள் உள்வரும் வௌியேறும் பாதையில் நிருமாணிப்பதற்குமாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.