• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
- சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தினால் வழங்கப்படும் நிதியின் கீழ் மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் கீழ் கடுவெல - அத்துருகிரிய, வல்கம் - அத்துருகிரிய, வாத்துவ - மொரன்துடுவ, பெல்லன - மொரகல ஆகிய வீதிகளில் செய்யப்படும் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகளை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 150.75 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Green Tech Consultants (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.