• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாவனையில்லாத வாகனங்களுக்குரிய கோவைகளை அகற்றுதல்
- கடந்த ஒரு தசாப்த காலமாக நாட்டின் தனியாள் வருமானம் படிப்படியாக அதிகரித்து வந்ததுடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையும் வருடாந்தம் படிப்படியாக அதிகரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஒக்றோபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன வகைகள் சிலவற்றின் எண்ணிக்கை ரீதியிலான அதிகரிப்பு சம்பந்தமான தகவல்கள் பின்வருமாறாகும்.

வாகன வகுப்பு 2008 2017 ஒக்றோபர் மாதம் வரையில்
மோட்டார் கார் 381,448 749,797
තமுச்சக்கர வண்டி 406,531 1,135,765
மோட்டார் சைக்கிள் 1,760,600 3,990,505
பேருந்து 81,050 106,804


இவ்வாறு வருடாந்தம் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கு ஒருங்கிணைவாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலுள்ள வாகனங்கள் தொடர்புபட்ட கோவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த கோவைகளை களஞ்சியப்படுத்துவதற்கு இந்த திணைக்கள மனையிடத்தினுள் நான்கு மாடிகளைக் கொண்ட ஆவண காப்பக கட்டிடமொன்றின் நிருமாணிப்பு வேலைகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றனன. ஆயினும், இந்த பதிவேட்டக கட்டடத்திலும் களஞ்சியப் படுத்தக்கூடிய ஆக்ககூடிய கோவைகளின் எண்ணிக்கை அண்ணளவாக 3.5 மில்லியன்களாகும்.

ஆதலால், தற்போது பாவனையில் இல்லாத வாகனங்களுக்குரிய கோவைகள் சகலவற்றையும் முறையாக அகற்றுவதன் மூலம் புதிய கோவைகளை களஞ்சியப்படுத்துவதற்கு இடவசதிகளை ஏற்பாடு செய்வதற்கு முன்மொழியப் பட்டுள்ளது. இதற்கமைவாக, கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் தொடர்ச்சியாக இறைவரி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளாத வாகனங்களை பாவனையில் இல்லாத வாகனங்களாக கருதி குறித்த இந்த வாகனங்களுக்குரிய கோவைகளை மோட்டார் வாகன போக்குவத்து திணைக்களத்தின் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றின் மேற்பார்வையின் கீழ் முறையாக அகற்றும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டது. அதேபோன்று இதுவரை முடிவுறாத சட்ட நடவடிக்கைகளுக்குரியதான வாகன கோவைகள் எதுவும் இதன் கீழ் அகற்றப்படக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டது.