• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1982 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவன சட்டத்தை திருத்துதல்
- இலங்கையில் அரசாங்க துறையின் முன்னுரிமை வாய்ந்த பயிற்சி நிறுவனமொன்றான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் பொறுப்பு மற்றும் நிருவாக திட்டம் கடந்த சில வருடங்களில் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைவாக பின்வரும் மாற்றங்கள் உள்ளடங்கும் விதத்தில் 1982 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவன சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தற்போதைய நிலைமைக்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் நிறுவன கட்டமைப்பு, நோக்கம், பொறுப்பு மற்றும் அதிகாரங்களைத் திருத்துதல்.

* இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் பட்டப்பின் படிப்பு கல்லூரியின் பணிகள் மற்றும் அதிகாரத்தை குறிப்பிடுவதற்காக சட்டத்திற்கு புதிய ஏற்பாடுகளை உள்ளடக்குதல்.

* ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளவாறு இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் பரீட்சைப் பிரிவின் பணிகள் மற்றும் அதிகாரத்தை குறிப்பிடுவதற்காக சட்டத்திற்கு புதிய ஏற்பாடுகளை உள்ளடக்குதல்.