• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவகத்தை 'பட்டயம் பெற்ற இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவனம்' என பெயரிடுதல்
- மனிதவள முகாமைத்துவம் என்னும் விடய பரப்பெல்லைக்குரிய தொழில்களின் விசேட தேவைகளை இனங்கண்டு நாட்டின் உற்பத்தி திறனை உயர்மட்டத்திற்கு கொண்டு வருவதற்காக மனிதவளத்தினைப் பயன்படுத்தி நிபுணத்துவம் மிக்க தொழில்சார்பாளர்களை உருவாக்கும் நோக்கில் 1959 ஆம் ஆண்டில் இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவகமானது தாபிக்கப்பட்டது. அதன் பின்னர், 1976 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் இந்த நிறுவனமானது கூட்டிணைக்கப்பட்டது.

மனிதவள முகாமைத்துவம் சம்பந்தமாக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான அறிவு மற்றும் பயிற்சியினை வழங்கும் முன்னோடி நிறுவனமொன்றாக இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவகம் செயலாற்றுகின்றதோடு, தொழிற் தகைமைகளைப் பூர்த்தி செய்த முழுநேர உறுப்பினர்கள் 1,500 பேர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். இந்த நிறுவனத்தின் பணிகளை முறைப்படுத்துவதற்கும் அதன் தரம்மிக்க தொழிற்தன்மை, அங்கீகாரம் மற்றும் நற்பெயர் என்பவற்றை மேம்படுத்துவதற்கும் காரணமாய் அமையும் விதத்தில் 'பட்டயம் பெற்ற இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவனம்' என இதன் பெயரை திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து 1976 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவன சட்டத்தை திருத்தும் பொருட்டு தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.