• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் மற்றும் மிகவும் உட்சிக்கல் வாய்ந்த நிதி குற்றங்கள் சம்பந்தமான வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக விசாரணை செய்வதற்கு விசேட உயர் நீதிமன்றம் ஒன்றை தாபித்தல்
- இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் மற்றும் மிகவும் உட்சிக்கல் வாய்ந்த நிதி குற்றங்கள் சம்பந்தமான வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக விசாரணை செய்வதற்கு விசேடமாக ஒதுக்கப்பட்ட மூவரடங்கிய உயர் நீதிமன்றம் ஒன்றை தாபிப்பதற்குத் தேவையான சட்டங்களை வரையும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டவரைநரினால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு தொடர்புடைய குற்றங்களின் தன்மை, அதன் கடுமை, உட்சிக்கல் நிலைமை, அரசாங்கம் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்துள்ள தாக்கம், தேசிய நலன் போன்ற விடயங்கள் முறையான வழிமுறையொன்றுக்கு உட்பட்டு கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சட்டத்தில் திட்டவட்டமாக குறித்துரைக்கப்படும் பிழைகள் சம்பந்தமான குற்றவியல் வழக்கு பணிகள் சட்டமா அதிபரினால் இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அதிபதியினால் உத்தேச நீதிமன்றத்துக்கு தொடர்புபடுத்தப்படலாம். இந்த சட்டமூலம் தற்போது சட்டமா அதிபரின் உடன்பாட்டுக்காக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.