• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டில் இலங்கை அனுசரணை வழங்கவுள்ள (CITES) CoP 18 மாநாட்டிற்கு உரியதாக அனுசரணை நாட்டு உடன்படிக்கை (Host Country Agreement)
- அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தில் (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora - CITES) இலங்கை 1976 ஆம் ஆண்டிலிருந்து ஒரு தரப்பாகவுள்ளது. இந்த சமவாயத்தின் 18 ஆவது மாநாடு 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தும் பொருட்டு அனுசரணை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2019 மே மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 2019 யூன் மாதம் 03 ஆம் திகதி வரை இந்த மாநாடு இலங்கையில் நடாத்தப்படவுள்ளதோடு, இதற்கு அனுசரணை வழங்குவது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கும் மேற்போந்த சர்வதேச சமவாயத்தின் செயலகத்திற்கும் இடையில் அனுசரணை நாட்டு உடன்படிக்கையில் (Host Country Agreement) கைச்சாத்திடுவதற்கு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.