• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய நீதிமன்ற கட்டடங்களை நிருமாணித்தல்
- இலங்கையில் நீதிமன்றங்கள் நடாத்திச் செல்லப்படும் கட்டடங்களில் பெரும்பாலானவை மிக பழைமைவாய்ந்தவையாவதோடு, அவற்றின் பராமரிப்புக்கு பாரியளவில் நிதி செலவு செய்ய வேண்டியுள்ளது. அதேபோன்று சட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த கட்டடங்களில் நிலவும் இடவசதியும் போதுமானதாக இல்லை. அத்துடன் வெலிமட, இரத்தினபுரி நீதிமன்ற கட்டடத் தொகுதிகள் மண்சரிவு ஆபத்துமிக்க காணிகளில் அமைந்துள்ளமையினால் அவற்றை இடம் நகர்த்த வேண்டியுமுள்ளது.

இதற்கமைவாக, 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி வெலிமட, இரத்தினபுரி, தெல்தெனிய, பூகொட, கந்தளாய் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டட தொகுதிகள் சார்பில் புதிய கட்டடங்களை நிருமாணிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.