• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மெதிரிகிரிய நீர்வழங்கல் திட்டத்தின் III ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- நீண்டகால சிறுநீரக நோய்க்கு ஆளாகியுள்ள, பாதுகாப்பான குடிநீர் மூலவளங்கள் இல்லாத பிரதேசமொன்றான மெதிரிகிரிய பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதனை குறியிலக்காகக் கொண்டு, மெதிரிகிரிய நீர்வழங்கல் திட்டமானது செயற்படுத்தப்படுகின்றது. மொறகஹகந்த நீர்த்தேக்க கருத்திட்டத்தின் காரணமாக இடம் பெயர்ந்த குடும்பங்களும் இந்தப் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளமையினால் பாதுகாப்பான குழாய் குடிநீருக்கான கேள்வி அதிகரித்து வருகின்றதோடு, இந்த கேள்வியை ஈடுசெய்யும் விதத்தில் மெதிரிகிரிய நீர்வழங்கல் III ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்திட்டத்தின் III ஆம் கட்டத்தின் கீழ் விநியோக முறைமைக்காக வடிவமைப்பு மற்றும் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,230 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Squire Mech Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.