• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் - கட்டம் 2
- ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தினால் கைத்தொழில் துறைக்குரிய 13 பட்டப்பாட நெறிகளை பட்டப்பாட நெறிகளை தற்போது 2,200 மாணவர்கள் கற்கின்றனர். இந்த பல்கலைக்கழகத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றதோடு, இதற்கு ஒருங்கிணைவாக அதன் உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது.

இதற்கமைவாக, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் நூலக கட்டடம், கேட்போர்கூடம், பதவியணி கற்றல் பிரிவு, மாற்று நீர்வழங்கல் முறைமை, மாணவ நலநோம்பல் நிலையங்களை நிருமாணித்தல் உட்பட பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை விருத்தி செய்தல் என்பவற்றுக்குரியதான பணிகளை 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கும் இதற்கமைவாக பொருத்தமான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்கு கேள்வி கோருவதற்கும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.