• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர பொது பயணிகள் போக்குவரத்துச் சேவையை விருத்தி செய்யும் பொருட்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 50 மின்சார பேருந்துகளை கொள்வனவு செய்தல்
- வசதிகளுடன் கூடிய நம்பத்தகு வினைத்திறன் மிக்க பொது போக்குவரத்து சேவையொன்று இல்லாமையினால் பெரும்பாலானோர் தமது அன்றாட பயணங்களுக்கு பிரத்தியேக வாகனங்களை பயன்படுத்துவதோடு, இதன் காரணமாக நகர வீதிகளில் கடும் வாகன நெரிசலும் வழி மாசடைதலும் காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஓடக்கூடிய நிலையில் 6,300 பேருந்துகள் உள்ளதோடு இவற்றுள் 2,467 பேருந்துகள் 10 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தவையாகும். இந்த பழைய பேருந்துகள் அடிக்கடி அனர்த்தங்களுக்கு ஆளாவாதன் காரணமாக பொதுமக்களுக்கு நம்பத்தகுந்த வினைத்திறன் மிக்க பேருந்து சேவையொன்றை வழங்குவது தடையாகவுள்ளது. அதேபோன்று இந்த சபைக்கு நேர அட்டவணை தேவைக்கு ஏற்ப ஈடுபடுத்துவதற்கு தேவையான மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,257 ஆகும். இலங்கை போக்குவரத்துச் சபை நூற்றுக்குநூறு வீதம் டீசல் பேருந்துகளை கொண்டுள்ளமையினால் இது வளி மாசடைவதற்கும் காரணமாகவுள்ளது.

ஆதலால், முதிய மற்றும் வலது குறைந்த பயணிகளுக்கு வசதியாக பயன்படுத்தக்கூடிய சூழல் நட்புறவு மிக்க துரித பேரூந்து போக்குவரத்து சேவையொன்றை (Bus Rapid Transit System) கொழும்பு நகரத்தினுள் தாபிப்பதற்கும் இதற்காக குளிரூட்டப்பட்ட அதன் கீழ்பகுதி உயரம் குறைந்த 50 மின்சார பேரூந்துகளை இலங்கை போக்குவரத்துச் சபைக்காக கொள்வனவு செய்வதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.