• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமான பயண தகவல் முகாமைத்துவ முறைமையொன்றைத் தாபித்தல்
- இலங்கைக்கான விமான பயண தகவல் முகாமைத்துவ முறைமையை வழங்குதல், நிறுவுதல் மற்றும் செயற்படுத்துதல் சார்பில் கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இதற்காக பிரான்ஸ் மற்றும் கனடா கம்பனிகள் விலை முன்வைப்புகளைச் செய்துள்ளன. விலைகள் மதிப்பிடப்பட்ட தொழினுட்ப மதிப்பீட்டு குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் இதற்குரிய ஒப்பந்தத்தை 3.3 மில்லியன் யூரோ மற்றும் 65 மில்லியன் ரூபா என்பவற்றின் மொத்த தொகைக்கு சமமான தொகைக்கு பிரான்ஸ் M/s. Thales Air Systems S.A.S நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.