• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அக்குரேகொட பாதுகாப்பு படை தலைமையக நிருமாணிப்பு கட்டடத்தொகுதியின் பிரதான நீர்வழங்கல் முறைமையை தாபித்தல்
- அக்குரேகொட பாதுகாப்பு படை தலைமையக கட்டடத்தொகுதி நிருமாணிப்பு கருத்திட்டத்தின் பிரதான நீர்வழங்கல் முறைமையை வடிவமைத்தல், பரிசீலித்தல், செயற்படுத்துதல் (Design, Supply, Installation, Testing and Commissioning of Water Mains for DHQC Project) என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம், 494.48 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Frigi Engineering Services (Pvt) Ltd கம்பனிக்கு வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.