• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க - தனியார் பங்குடமை மூலம் கொழும்பு Grand Oriental Hotel அபிவிருத்தி
- கொழும்பு Grand Oriental Hotel சார்பில் அரசாங்க - தனியார் பங்குடமை வழிமுறையின் கீழ், அதன் மரபுரிமையை பாதுகாக்கும் விதத்தில் அபிவிருத்தி செய்து ஆடம்பர ஹோட்டலொன்றாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சாத்தியத்தகவாய்வொன்றினை செய்வதற்கு சிங்கப்பூர் HPL Hotels and Resorts கம்பனியினால் பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இந்தப் பிரேரிப்பினை மதிப்பிடும் பொருட்டு கருத்திட்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் அரசாங்கத்தின் உரிய வழிகாட்டல்களுக்கு உட்பட்டு இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.