• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அபிவிருத்திக்காக வியட்நாம் மக்கள் பொலிஸ் பயிற்சி நிறுவனத்துக்கும் இலங்கை தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
- குற்றங்களை தடுப்பதற்காக வியட்நாமுக்கும் இலங்கைக்கும் இடையில் செயற்பாட்டு பங்குடமையை விருத்தி செய்வதற்கு இரு நாடுகளுக்குமிடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி சம்பந்தமாக இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை பறிமாறிக்கொள்வதன் மூலம் ஒத்துழைப்பினை அபிவிருத்தி செய்து கொள்ளும் நோக்கில் வியட்நாம் மக்கள் பொலிஸ் பயிற்சி நிறுவனத்துக்கும் இலங்கை தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.