• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சந்தேகநபர் ஒருவரை / குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் தேவையை குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் நீக்குவதற்காக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தை திருத்துதல்
- கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 24 மணித்தியாலத்திற்குள் நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டுமென்பதோடு, அதன் போது பிணை வழங்காது சிறையில் அடைக்கும் சந்தர்ப்பங்களில் குறித்த கட்டளையை நீடித்துக் கொள்வதற்கு பொதுவாக இரண்டு (02) வாரங்களுக்கு ஒருதடவை கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துதல் வேண்டும். அதேபோன்று பிணை வழங்குவதற்கு நீதவானுக்கு சட்ட அதிகாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் கூட சந்தேக நபரை / குற்றஞ்சாட்டப்பட்டவரை காலத்துக்குக் காலம் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துதல் வேண்டும்.

நாட்டின் நீதிமன்ற முறைமையில் நிலவும் காலதாமதம் மற்றும் முக்கியமாக கைதிகளை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லும் போது நிகழும் துரதிஷ்டவசமான சம்பவங்கள், சந்தேக நபர்களுக்கு எதிரான உயிர் அச்சுறுத்தல் மற்றும் அவர்கள் தப்பி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சந்தேக நபர்களை / குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களை வரையறுப்பதன்பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக தண்டனை சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை ஆகியவற்றை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் சிபாரிசின் பிரகாரம் கைதி ஒருவரின் நலநோம்பல் பற்றி மேற்பார்வை செய்யும் தேவையை தொடர்ந்தும் பேணி, சிறையில் இடுவதற்கான கட்டளையை நீடிக்கும் நோக்கத்துக்காக சந்தேக நபரை அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டியதில்லை என்னும் நடவடிக்கை முறையொன்றை திட்டவட்டமாக இனங்காணப்பட்ட சந்தர்ப்பங்களின் கீழ் அறிமுகப்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.