• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் முன்னணி பழவகை பயிர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் வணிக மயப்படுத்துவதற்குமாக தொழினுட்ப உதவியினை பெற்றுக் கொள்ளல்
- இலங்கையில் பழவகை பயிர் செய்கையின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் வினைத்திறன் மிக்க கமத்தொழில் வர்த்தக பிரிவொன்றை மேம்படுத்துவதன் மூலம் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு உகந்தவாறு இந்த பயிர்களின் வணிக செயற்பாடுகளை அதிகரிப்பதனை நோக்காகக் கொண்டு, நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டம் சார்பில் தொழினுட்ப உதவியினை வழங்குவதற்கு மக்கள் சீனக் குடியரசின் தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு அமைப்பினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை, மா மற்றும் அன்னாசி போன்ற பழவகை சார்ந்த பயிர்களை குறியிலக்காகக் கொண்டு அவற்றின் உற்பத்தி, தரம் மற்றும் விளைவு பெருக்கத்தை அதிகரித்தல், வருமானத்தை அதிகரித்தல், பழவகை பூங்கா மற்றும் பதனிடல் நிலையங்கள் போன்றவற்றுக்கான முதலீட்டினை கவர்ந்திழுப்பதற்கு அரசாங்க / தனியார் பங்குடமை வழிமுறைகளை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாழை செய்கைக்கான பணிகளை பிரதானமாக மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டும் மா மர வளர்ப்புக்கான பணிகளை அநுராதபுரம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டும் அன்னாசி செய்கைக்கான பணிகளை கம்பஹா, குருநாகல், மொனராகலை மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டும் மேற்கொள்ளப்படும். நாட்டின் கமத்தொழில் துறையின் அபிவிருத்திக்கு ஏதுவாய் அமையும் மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் முற்தரப்பு உடன்படிக்கையொன்று செய்துகொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.