• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் கமத்தொழில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல்
- கமத்தொழில் செயற்பாடுகள் தொடர்புபட்ட அறிவு, தொழினுட்பம், தொழிற்பாட்டு முறைகள் போன்றவற்றை இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் கமத்தொழில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அத்துடன் இலங்கையிலிருந்து துருக்கி குடியரச்சுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவை அதிகரிப்பது சம்பந்தமாக இலங்கை தேயிலை சபையினால் விசேட உடன்படிக்கை யொன்றைச் செய்துகொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை பற்றியும் அமைச்சரவையினால் மேலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.