• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்ப வர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் தர்க்கிமினிஸ்தானுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
- இலங்கைக்கும் தர்க்கிமினிஸ்தானுக்கும் இடையில் நட்புறவுமிக்க உறவினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ள இருநாடுகளினதும் பிரசைகளுக்கு இருநாடுகளிலும் சுற்றுலா மேற்கொள்ளும் போது வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.