• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்
- (Smallholder Agribusiness Partnership) சிறிய அளவிலான கிராமிய கமத்தொழில் உற்பத்தியாளர்களின் போட்டிகரமான ஆற்றலை விருத்தி செய்து அவர்களுடைய வாழ்வாதார வழிகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கு ஒத்துழைப்பு நல்கும் நோக்கில், கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்தின் உதவியின் கீழ் "சிறிய அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டமானது" நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஒப்பீட்டு ரீதியில் குறைவான அபிவிருத்தியுடனான மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கருத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் சுமார் 57,500 கிராமிய குடும்பங்களுக்கு நலன் கிடைக்கப் பெறும்.

தமது பண்ணைகளின் அபிவிருத்தி உட்பட வர்த்தக மட்டத்தில் வியாபாரத்தினை பலப்படுத்திக் கொள்வதற்கு இளம் விவசாய தொழில்முயற்சியாளர்களுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவது இந்தக் கருத்திட்டத்தின் பிரதான அங்கமொன்றாகும். இதற்கமைவாக, உற்பத்தி குழுக்களுக்கு, விவசாய குழுக்களுக்கு மற்றும் இளம் விவசாய தொழில்முயற்சியாளர்களுக்குத் தேவையான மூலதனத்தை பெற்றுக் கொள்வதற்கு 6.5 சதவீதம் கொண்ட வருடாந்த வட்டி வீதத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடன் வசதிகளை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.