• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் திட்டம் - கட்டம் II - விரிவான வடிவமைப்பு மற்றும் விலைமனு கேள்வி உதவிக்கான ஆலோசனை ஒப்பந்தம்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் மதியுரைஞர் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் திட்டம் - கட்டம் II - விரிவான வடிவமைப்பு மற்றும் விலைமனு கேள்வி உதவிக்கான ஆலோசனை ஒப்பந்தத்தை இலங்கையின் M/s. Ceywater Consultants (Pvt.) Ltd நிறுவனத்துடனும் M/s. EML Consultants (Pvt.) Ltd நிறுவனத்துடனும் இணைந்து யப்பானின் M/s. NJS Consultants Co. Ltd. நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.