• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு சீருடை மற்றும் ஏனைய துணிவகைகளை கொள்வனவு செய்தல்
- கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைக்குத் தேவையான சீருடைகள் கூறுவிலைகளைக் கோருவதன் மூலம் கொள்வனவு செய்யப்படுகின்றன. அதற்கிணங்க, உள்ளூர் ஆடை ஒதுக்கீட்டு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைக்குத் தேவையான சீருடைகளை 257.3 மில்லியன் கொண்ட தொகைக்கு கொள்வனவு செய்யும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.