• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி, நிலக்கீழ் மழைநீர் வடிகால் முறைமையை புனரமைப்புச் செய்தல்
- தந்திரோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் கண்டி நகர அபிவிருத்தி செயற்பாடுகளுடன் ஒத்திசையும் பொருட்டு கண்டியில் நிலக்கீழ் மழைநீர் வடிகாலமைப்பு முறைமையினை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இந்த சிவில் ஒப்பந்தத்தை 1,016.3 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு Ludwig Pfeiffer (Germany) - Gypsum Structural India (Pvt.) Ltd கூட்டு தொழில் முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.