• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செத்சிறிபாய மனையிடத்தில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள பல்மாடி அலுவலக கட்டடத் தொகுதியின் நிலக்காலிடல் அத்திபாரத்தை நிருமாணித்தல்
- ஶ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையின் நிர்வாக நகரத்திற்குள் அலுவலக இடவசதிக்கான அதிகரித்த கேள்வியினை சமாளிக்கும் பொருட்டு பல்மாடி அலுவலக கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. செத்சிறிபாய மனையிடத்தில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்ட கட்டடமானது 25 அடுக்கு மாடிகளையும் 123,902 சதுர மீற்றர் கொண்ட மாடிப்பரப்பொன்றையும் உள்ளடக்குகின்றது. பசுமைக்கட்டட கோட்பாட்டிற்கு அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கட்டடமானது நவீன அலுவலக வசதிகளை உள்ளடக்கும் என்பதுடன் 3 1/2 வருட காலப்பகுதிக்குள் இந்நிர்மாணத்தினை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 15.6 பில்லியன் ரூபாவாகும்.

தற்போது, பிரேரிக்கப்பட்ட கட்டடத்தின் நிலக்காலிடல் அத்திபார நிருமாணிப்பு கருதி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இந்த ஒப்பந்தத்தை 1155 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s San Piling (Pvt.) Ltd நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.