• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்துராஜவெல மற்றும் கெரவலபிட்டிய பிரதேசங்களில் நிலமீட்பு சார்பிலும் கடல் மணல் இருப்பினை சேர்ப்பதன் சார்பிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள மணலை அகழ்ந்து, இறைத்தல்
- சுற்றாடல் மீது ஏற்படுத்தப்படும் ஆற்று மணல் அகழ்வின் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை குறைக்கும் தீர்வொன்றாக கடற்கரைக்கு அப்பால் உள்ள மணலை அகழ்வதிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் கடல் மணலை தூய்மைப்படுத்துவதிலும் அம்மணலை நிருமாண செயற்பாடுகளுக்கு வழங்குவதிலும் இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தானம் ஈடுபட்டுள்ளது. இந்நோக்கம் கருதி முத்துராஜவெல பிரதேசத்தில் பேணப்படும் மணல் குவியலுக்காக புதிய கடல் மணலை பெற்றுக் கொள்வது அவசியமாகும். இதனையொத்ததாக, அபிவிருத்தி திட்டங்களுக்கு இணங்க கெரவலபிட்டியவில் இடம்பெற்றுவரும் பிரேரிக்கப்பட்ட காணி நிலமீட்பு கருதி கடல் மணலை வழங்குவது அவசியமாகும்.

இது சம்பந்தமாக கடற்கரைக்கு அப்பால் உள்ள மணலை அகழ்ந்து, இறைப்பதற்காக பொருத்தமான ஒப்பந்தக்காரரொருவரை தெரிவு செய்யும் பொருட்டு சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 19.97 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட தொகைக்கு டென்மார்க்கின் M/s. Rohde Nielsen A/S நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.