• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண புதிய தொழிற் பயிற்சி நிலையமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- தொழிற்பயிற்சி நிலையங்களின் வலையமைப்பை நாட்டில் விஸ்தரிக்கும் குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட 'திறன்கள் துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்' கீழ், ஹொரண புதிய தொழிற் பயிற்சி நிலையமொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இத்தொழிற் பயிற்சி நிலையத்தின் நிருமாணத்திற்கான ஒப்பந்தத்தை 141 மில்லியன் ரூபா கொண்ட தொகைகக்கு M/s. Asiri Constructions நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.