• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச போட்டிகள் / போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு தேசிய குழாம்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ள விளையாட்டு அணிகளின் செயலாற்றுகையை மேம்படுத்துதல்
- இலங்கையிலுள்ள தொழில் ரீதியான விளையாட்டு வீரர்களின் எண்ணிககை குறைவானதோடு, அவர்களின் பெரும்பாலானோர் தங்களுடை நாளாந்த கடமைகள் உட்பட ஏனைய செயற்பாடுகளுக்கிடையில் சந்தர்ப்பம் கிடைக்கின்றவாறு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். சர்வதேச போட்டிகளை இலக்காகக் கொண்டு விளையாட்டு வீரர்களின் செயலாற்றுகையை மேம்படுத்துதவற்கு அவர்களை பயிற்சி குழாம்களில் சேர்த்து தொழினுட்ப பயிற்சி, உணவு, மருத்துவ ஆலோசனை, மருந்து போன்ற சரியான வழிகாட்டல்களை வழங்குவது மிக முக்கியமானதாகும். தற்போது விளையாட்டுத்துறை அமைச்சினால் மெய்வல்லுநர் போட்டிகள், பாரந்தூக்கல், வூசூ, ஹொக்கி, ரகர், கராத்தே போன்ற விளையாட்டுக்கள் மற்றும் பரா ஒலிம்பிக்கு போட்டிகள் சார்பில் விளையாட்டு பயிற்சிக் குழாம்கள் நடாத்திச் செல்லப்படுவதோடு, இதன் மூலம் 159 விளையாட்டு வீரர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இந்த குழாம்களிலுள்ள விளையாட்டு வீரர் ஒருவருக்கு 10,000/- ரூபாவிலிருந்து 80,000/- ரூபா வரையிலான கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.

சர்வதேச போட்டிகள் / போட்டித் தொடர்களின் பெறுபேறுகளை இலக்காகக் கொண்டு இந்தப் குழாம்களின் செயலாற்றுகையை அதிகரிப்பது அத்தியாவசியமானதாகும். இந்த குழாம்களிலுள்ள விளையாட்டு வீரர்களின் பெரும்பாலானோர் அரசாங்க, முப்படை, பொலிஸ் போன்ற நிறுவனங்களில் சேவையாற்றிக் கொண்டு விளையாட்டுகளில் பங்கெடுக்கின்றமையினால் பயிற்சி நோக்கங்களுக்காக அவர்களை தொழில் ரீதியிலான சூழலிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது தேவையானதாகும். அதேபோன்று சகல பயிற்சி குழாம்கள் சார்பிலும் தேசிய மற்றும் சருவதேச பயிற்சியாளர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கும் பயிற்சி குழாம்களில் சேருகின்ற விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் விளையாட்டுகளில் உச்சத் திறமையைக் காட்டும் விளையாட்டு வீரர்களுக்கு உரிய ஆட்சேர்ப்புத் தகைமைகளை கொண்டுள்ளவிடத்து அரசாங்க நிறுவனங்களில் நியமனங்களை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிப்பதற்குமாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.