• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை மாவட்டம் பேருவளை, அளுத்கமை பிரதேசங்களில் 2014‑06‑15 ஆம் 2014‑06‑16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல்
- களுத்துறை மாவட்டம் பேருவளை, அளுத்கமை பிரதேசங்களில் 2014 யூன் மாதம் 15ஆம் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கவலைக்கிடமான சம்பவத்தின் போது இனங்காணப்படாதவர்களினால் 273 குடும்பங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ள, இங்கு சேதமடைந்த கட்டடங்கள் இலங்கை தரைப்படையினால் திருத்தியமைக்கப்பட்டன. ஆயினும் இதன்போது சேதமடைந்த வீட்டு உபகரணங்கள் உட்பட வாழ்வாதார வழிகளை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு செலுத்தப்படவில்லை.

உரிய சேதங்களை பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்த நிகழ்வின் காரணமாக இல்லாமற்போன ஏனைய சொத்துக்கள் உட்பட வீட்டு உபகரணங்கள் சார்பில் நட்டஈடு செலுத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, நட்டஈடு வழங்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.