• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தின் பிரதான கட்டடத்தை புனரமைத்தல்
- நாட்டின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் மிக முக்கிய, பழமைவாய்ந்த, பெறுமதிமிக்க ஆவணங்கள் பெரும்பாலானவை அதேபோன்று 1885 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ள இந்நாட்டு சட்டங்கள் ஒழுங்குவிதிகள் போன்றவை தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளன. தனித்துவமான வடிவமைப்புக்கு அமைவாக நிருமாணிக்கப்பட்டுள்ள இந்த திணைக்களத்தின் பிரதான கட்டடம் 07 மாடிகளைக் கொண்டுள்ளதோடு, இது 40 வருடங்கள் பழமைவாய்ந்ததாகும்.

ஆதலால், இங்கு வைக்கப்பட்டுள்ள மிக முக்கிய ஆவணங்களை உரிய தரங்களுக்கு அமைவாக பாதுகாப்பதற்குத் தேவையான பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கும், உயர் சுவடிக்கூட சேவையொன்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் இந்த பிரதான கட்டடத்தை புனரமைக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.