• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"மலட்டுத் தன்மைக்கு" சிகிச்சையளிக்கும் சகல வசதிகளுடனுமான சிகிச்சை நிலையங்களைத் தாபித்தல்
- இலங்கையில் கணவன் மனைவிமார்களுக்கிடையில் 15 சதவீதத்திற்கு மேலானவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினையானது "மலட்டுத் தன்மை" அல்லது "கர்ப்பம் தரிக்க இயலாமற் போதல்" என இனங்காணப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கிடையிலான உறவு இல்லாமற் போதல், சமூகத்தில் தனிமைப்படுதல், வீடுகளில் ஒத்துழைப்பு கிடைக்காமற் போதல், சொத்துக்களின் உரிமை தடைப்படுதல் போன்ற சாதகமற்ற சமூக விளைவுகளுக்கு இது காரணமாயுள்ளது.

ஆதலால், மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கும் போது அரசாங்க சுகாதார சேவையினால் தற்போது வழங்கப்படும் சேவைகளை மேலும் விருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக செயற்கை கருவூட்டல் (IVF) மற்றும் கருக்களை உறைநிலையில் வைத்தல் போன்ற நவீன சிகிச்சை முறைகள் உள்ள மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை வழங்கும் முழுமையான வசதியினை கொண்ட நிலையமொன்றை முதலாவதாக காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையில் தாபிப்பதற்கும் இதன் இரண்டாவது நிலையத்தை காலி, கராபிட்டிய புதிய மகப்பேற்று வைத்தியசாலையில் தாபிப்பதற்கும் மூன்றாம் கட்டத்தின் கீழ் ஏனைய சகல மாகாணங்களிலும் இத்தகைய சிகிச்சை நிலையமொன்று வீதம் தாபிப்பதற்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.