• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'Wolbachia' பக்றீரியா மூலம் டெங்கு நுளம்புகளை இல்லாதொழிக்கும் முன்னோடிக் கருத்திட்டம் ஒன்றினை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையில் பிரதான பொது சுகாதார பிரச்சினையாக டெங்கு நோய் உருவாகியுள்ளதோடு, கடந்த இரண்டு தசாப்த காலமாக அது தொற்று நிலைமைக்கு மாறியுள்ளது. இந்த நோயை தடுப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இந்த நோய் நிலைமைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் நாட்டிற்கு இல்லாமற் போன மனித உயிர்களின் எண்ணிக்கை 400 க்கு மேலாகும். Aedes aegypti நுளம்பு விசேடமொன்றின் ஊடாக பரவும் டெங்கு நோயை சம்பிரதாய வழிமுறைகளின் மூலம் கட்டுப்படுத்தும் போது நிலவும் பிரச்சினைகள் காரணமாக இதனை கட்டுப்படுத்துவதற்கு வினைத்திறன் மிக்கதும் சுற்றாடல் நட்புறவு மிக்கதுமான உயிரினக் கட்டுப்பாடு திறமுறையினை பயன்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது.

டெங்கு வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு 'Wolbachia' பக்றீரியாவை பயன்டுத்துவதற்கான சாத்தியம் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளது. இந்த பக்றீரியாக்கள் மூலம் டெங்கு நுளம்புகளின் உடலினுள் வளர்ச்சியடைக்கூடிய மட்டத்திற்கு டெங்கு வைரசின் வளர்ச்சியினை தடுக்கலாம். இந்த வழிமுறையானது அவுஸ்திரேலியா, வியட்நாம், இந்தோனேசியா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக, இலங்கையில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நீண்டகால வழிமுறையொன்றாக 'Wolbachia' பக்றீரியாவை பயன்படுத்தும் கருத்திட்டமொன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமொன்றாக கொழும்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.