• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டு அவர்கள் குடியிருந்த வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கூலி கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குதல்
- உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டு அவர்களுடைய நிரந்தர வசிப்பிடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் குடியிருப்பதற்கு பொருத்தமான மாற்று காணிகள் வழங்கப்படும் வரை மாதாந்த வீட்டுக்கூலி கொடுப்பனவொன்றாக ஆறு (06) மாத காலத்திற்கு வழங்குவதற்கு 2017-08-29 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. இந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக இனங்காணப்பட்டுள்ள பண்டாரவளை பிரதேசத்தில் அமைந்துள்ள காணித் துண்டுகள் சில குடியிருப்பதற்கு போதுமான அளவு பாதுகாப்பற்றதென தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நோக்கத்திற்குப் பொருத்தமான வனப்பாத்துகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணி இனங்காணப்பட்டுள்ளதோடு, அதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆதலால், உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது சம்பந்தமாக ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த அனர்த்த நிலைமை காரணமாக அவர்களுடைய வசிப்பிடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தங்போது வழங்கப்படும் மாதாந்த வீட்டுக் கூலி கொடுப்பனவை மேலும் ஆறு (06) மாத காலப்பகுதிக்கு வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.