• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் பரிசோதனை நடவடிக்கைகள் காரணமாக உரிய முறையில் நீர்ப்பாசனம் வழங்குவதற்கு முடியாமற் போனமையினால் 2017/2018 பெரும்போகத்தில் அவர்களுடைய பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை கைவிட நேர்ந்த கவுடுள்ள நீர்ப்பாசன திட்டத்தின் 4,000 விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- 2017/2018 பெரும்போகத்தின் போது நீர் கட்டுப்பாட்டுக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் 2017-11-10 ஆம் திகதியிலிருந்து எலஹர, கிரிதலே, மின்னேரிய மற்றும் கவுடுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நீர் வழங்கவேண்டியிருந்ததோடு, மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிருமாணிப்பு பரிசோதனை பணிகளை பூர்த்தி செய்வதற்காக நீர் ஒன்றுதிரட்ட வேண்டியிருந்தமையினால் கவுடுள்ள நீர்த்தேக்கத்தின் மேல் கால்வாய் நீர்ப்பாசன வசதி வழங்கப்படும் 4,000 விவசாயிகளுக்கு இந்த பெரும்போகத்தின் போது நீர்வழங்க முடியாமற் போயுள்ளது.

இதன் காரணமாக 2017/2018 பெரும்போகத்தில் அவர்களுடைய பயிர்ச் செய்கையை கைவிட நேர்ந்த கவுடுள்ள நீர்ப்பாசனத் திட்டத்தின் 4,000 விவசாய குடும்பங்களுக்கு 10,000/- ரூபா வீதம் விசேட நிவாரணமொன்றை அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 5,000/- ரூபாவைக் கொண்ட உலர் உணவுக்கு மேலதிகமாக எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்கு வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.