• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழினுட்பத்தை கற்பதற்கும் செய்முறை வாய்ப்புக்களை ஏற்பாடு செய்வதற்குமான முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- 11 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழினுட்பத்தை கற்பதற்கும் செய்முறைகளை செய்வதற்கும் வாய்ப்பளிக்கும் நோக்கில் 100 பாடசாலைகளுக்கு ஆரம்ப IoT (Internet of Things) பயிற்சி கருவிகளை வழங்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்கீழ் தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகள் சார்பில் BBC Micro: Bit உபகரணங்கள் 04, சில சென்சர்கள், செறிவூட்டும் உபரகணங்கள் (Charger), Raspberry Pi3 கணனியொன்று அடங்கலாக 20 பயிற்சிக் கருவிகள் வீதம் வழங்கப்படும்.

இந்த கருத்திட்டத்திற்குத் தேவையான வன்பொருள் வழங்குவதற்கும் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சுக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 99.21 மில்லியன் ரூபாவுக்கு Orel Corporation நிறுவனத்திற்கு நேரடி ஒப்பந்தமொன்றாக வழங்கும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.