• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு 5, காலிங்க மாவத்தையில் குறைந்த வருமானம் பெறுபவர் களுகாக வீடமைப்புக் கருத்திட்டத்தின் மீதி வேலைகளை பூர்த்தி செய்தல்
- கொழும்பு 5, காலிங்க மாவத்தையில் நிருமாணிக்கப்பட்டு வரும் 528 வீட்டு அலகுகளைக் கொண்ட குறைந்த வருமானம் பெறுபவர் களுக்கான கருத்திட்டத்தின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நிதியிடுவதற்கும் பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய ஒப்பந்தத்தை அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1,898.7 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Maga Engineering (pvt) Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.