• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தலவத்துகொட, ஶ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வீதி வீடமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- தலவத்துகொட, ஶ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வீதியில் நடுத்தர குடும்பங்களுக்கான 400 வீட்டு அலகுகளைக் கொண்ட வீடமைப்பு கருத்திட்டமொன்றை வடிவமைப்பதற்கும் நிருமாணிப்பதற்கும் நிதியிடுவதற்கும் பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 6,997 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Yanjian Group Co. Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.