• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரண்டாம் நிலை நகர நிலைபேறுடைய அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு தொழினுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக கடன் வசதியினைப் பெற்றுக் கொள்ளல்
- நாட்டின் முழுமொத்த அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 25 நகரங்களில் ஆற்றல் அபிவிருத்தி, புனரமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி போன்ற பணிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இரண்டாம் நிலை நகர நிலைபேறுடைய அபிவிருத்தி கருத்திட்டமானது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழான துணைக் கருத்திட்டங்களை திட்டமிடுதல், அடிப்படை கொள்வனவு மற்றும் முறையான நிருவாக வழிமுறைகளை இனங்காணுதல் சார்பில் மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் இதற்கான தொழினுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 05 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.